அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே!
அன்புடன்
ரஜின்
உங்கள் அனைவரையும் சிறிய இடைவெளிக்கு பின் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி...
அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்..
மறுமை குறித்து சிந்திக்க சில குர்ஆன் வசனங்கள்:
விசுவாசங்கொண்டு நற்கருமங்களை செய்தார்களே அத்தகையோர்களை பூமியில் குழப்பம் செய்கின்றவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது பயபக்தியுடையோர்களை குற்றம் புரியும் பாவிகளைப்போல் ஆக்கிவிடுவோமா? - 38:28
தீமையை சம்பாதித்துக்கொண்டார்களே அத்தகையோர்-விசுவாசங்கொண்டு நற்கருமங்களை செய்தார்களே அத்தகையோரைப்போன்று அவர்களையும் நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணிக்கொண்டார்களா? அவர்கள் ஜீவித்து இருப்பதும் மரணித்து விடுவதும் சமமே.அவர்கள் (இதற்கு மாறாக) தீர்ப்பு செய்துகொண்டது மிகக்கெட்டதாகிவிட்டது.
வானங்களையும் பூமியையும் அல்லாஹ் நீதியைக்கொண்டு (தக்க காரணத்திற்காகவே) படைத்திருக்கிறான்.இன்னும் ஒவ்வொரு ஆத்மாவும் அது சம்பாதித்ததைக்கொண்டு கூலி கொடுக்கப்படுவதற்காகவும் (படைத்துள்ளான்) அவர்கள் அநியாயம் செய்யப்படவுமாட்டார்கள். 45-21 22
நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியைப்படைத்து இன்னும் அவைகளைப் படைத்ததால் சோர்வடையவில்லையே, அத்தகைய அல்லாஹ் மரணித்தோரை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? ஆம்! நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். 46:33
அவன் எத்தகையவனென்றால் படைப்பை முன்மாதிரியின்றியே ஆரம்பமாக அவன் தொடங்குகின்றான்,பின்னர் அதை அவன் மீளவைக்கிறான்.இது அவனுக்கு மிக எளிமையானதாகும்.வானங்களிலும் பூமியிலும் மிக்க மேலான வர்ணனைப்பண்பு அவனுக்குரியதே. மேலும் அவன் யாவற்றையும் மிகைத்தவன் தீர்க்கமான அறிவுடையவன்.30- 27
நபியே! எழுதப்பட்ட (பெரும்) ஏடுகள் சுருட்டப்படுவதைப்போல நாம் வானத்தை சுருட்டிவிடும் நாளை (நினைவுகூறுவீறாக) முதல் படைப்பை நாம் ஆரம்பித்தது போன்றே அதை நாம் (திரும்பவும் ) மீளவைப்போம்.(இது) நம்மீது கட்டாயமான வாக்குறுதியாகும்.நிச்சயமாக நாம் இதைச் செய்வோராக இருக்கிறோம். 21: 104
(படைப்புகள் யாவற்றையும்) முதலாவதாகப் படைத்ததில் நாம் இயலாமலாகிவிட்டோமா? அவ்வாறன்று! (இறந்தபின் உயிர்கொடுத்து நாம்) புதிதாக படைப்பது பற்றி இவர்கள் சந்தேகத்திலிருக்கினர். 50:15
மூலம் : அல்குர்ஆன்
அன்புடன்
ரஜின்
அஸ்ஸலாமு அலைக்கும் ரஜின்,
பதிலளிநீக்குஅழகான இறைவசனங்களை நினைவுபடுத்தியதற்கு நன்றி...இந்த பெருநாளில் நம் அனைவருக்கும் இறைவன் அமைதியையும், மனமகிழ்ச்சியையும் தந்தருள்வானாக...ஆமீன்.
தொடர்ந்து எழுதுங்க...
வ அலைக்கும் ஸலாம் சகோ ஆஷிக்...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி...நீண்ட இடைவெளியை நிறப்ப என்னாலான சிறிய பதிவு...தற்போது எழுத என்னிடம் பொருள் இல்லை..அதனால்தான் பொருள் செறிந்த வசனங்கள் நினைவில் கொள்ள... கொடுத்திருக்கிறேன்..
அன்புடன்
ரஜின்
ஒப்பில்லாத குர் ஆன் வசனங்களை நினைவுப்படுத்தியதற்கு நன்றி ரஜின்.
பதிலளிநீக்கு