வியாழன், ஜனவரி 24, 2013

விஸ்வரூபம்: முஸ்லிம்களின் மனநிலை என்ன?

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே!

பிழையான எண்ணம் கொண்டு இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தவறாக சித்தரிக்கும் கமல்ஹாசன் மனம் திருந்த மனதார பிரார்த்திக்கிறோம்.
விஸ்வரூபம் எடுத்திருக்கும் நடிகர் கமல்ஹாசனின் திரைப்பட வெளியீடு தொடர்பான பிரச்சனை, அடிப்படையில் முஸ்லிம்களின் எதிர்ப்பை பின்னனியாகக் கொண்டு இன்றைய நாளைக் கடந்தவண்ணம் இருக்கிறது. 

இந்த பிரச்சனை இப்போது எந்த அளவில் பேசப்படுகிறது? அல்லது பேசப்பட வைக்கப்படுகிறது என பார்த்தால்? இந்தப் படம் கொண்டிருக்கும் கருத்துக்களையோ, அல்லது அது உண்டாக்கவிருக்கும் தாக்கம் குறித்தோ சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ யாரும் பேசத் தயாராக இல்லை. இதை எதிர்த்து நிற்கும் முஸ்லிம்களை, அவர்களது எதிர்ப்பு கோஷங்களை, போராட்டங்களை மட்டுமே முன்னிருத்தி இந்த விசயம் பார்க்கப்படுகிற்து.

ஏன் இந்த போராட்டம்? எதற்கு இத்தனை கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள், இதன் பின்னனியாக முஸ்லிம்கள் எதைக் கையில் கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்தும் விரிவாக இல்லாவிடினும் குறைவாகவாவது அலசிப்பார்க்கவேண்டியது அவசியம்.

ஒரு பிரச்சனையை அணுகும் போது இருதரப்பு வாதங்களையும் கணக்கில் கொண்டு பார்வையை அதன்மீது சீராக்குவதே குறைந்த பட்ச நியாயமாக இருக்கும்.

முதல் தரப்பாக கமல்ஹாசன் குறித்து அதிகமாகவே விவாதிக்கப்பட்டிருக்கிறது. பெரும் பொருட்செலவு, பெரிய முயற்சி, புதிய தொழில் நுட்பம், என பல காரணிகள் அவரது தரப்பில் நியாயங்களாக முன்வைக்கப்படுகிறது.

இரண்டாவது தரப்பான முஸ்லிம்களின் நிலையை பார்வைக்கு கொண்டுவரும்முன்,  மையப்பொருளான சினிமா என்ற ஒன்று எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்வது, அல்லது ஒரு கனம் மனதில் இறுத்திக்கொள்வது, பிரச்சனையின் தீவிரத்திற்கான காரணத்தை அறிந்திட உதவும்.

சினிமா: இது  ஊடகங்களுக்கெல்லாம் தலை. ஒரு செய்தியை உச்சபட்சமாக  மக்கள் மத்தியில் எத்தனை தூரம் எடுத்துச்செல்ல முடியுமோ அந்த எல்லையை தொட்டு, ஒரு கருத்தை மனதில் பதியவைக்கும் காத்திரமான கருவி. 

இதன் வீரியம் அலாதியானது. சாதாரணமான ஒரு நிகழ்வை தக்க கோணத்தில் காட்சிப்படுத்தி, அதற்கு பின்னனியில் பொருத்தமான வசனம், இசையுடன் கூடிய நிகழ்வாக உருவகப்படுத்தி அசாதாரணமாக்கும் வல்லமை பொருந்தியது. அப்படிப்பட்ட காட்சி ஊடகத்தில் உருவாகும் ஒரு கருத்து, மக்களை சென்றடைந்தால், அது சரியோ, தவறோ, அதன் பொருண்மை வீரியம் இழப்பதற்கு காலங்கள் ஆகும்..

என்ன இப்டி சொல்ரீங்க இந்தக்காலத்துல யாரு சினிமா பாத்து விசயத்த மனசுல வாங்கிறா.. இது வெறும் பொழுதுபோக்கு ஊடகம். எந்திர வாழ்க்கைல சில மணிநேரம் மனஓய்வுக்கான கருவி அவ்ளோதான். அப்டி சொன்னீங்கன்னா... உண்மைதான்..

இந்தகாலம் இல்ல, எந்தக்காலத்துலையும் யாரும் சினிமாவை பார்த்து நடைமுறை வாழ்க்கையை வடிவமைப்பதில்லை. ஆனால் அதன் தாக்கம் எதார்த்த வாழ்வின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் அச்சுப்பிசகாமல் பிரதிபலிக்கிறது என்பது மறுக்கவியலாத உண்மை.

சரி! அப்படிப்பட்ட சினிமாவிற்கு சமூகத்தில் எத்தகைய பொருப்புகள் உண்டு.அது  தன் பொருப்புணர்ந்து செயல்படுதான்னு கேட்ட? மறுப்பதற்கு இல்லை என்பதைக் காட்டிலும் ஆழமான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை என்றே சொல்வேன். 

சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களின் மனதில் அசாதராண விசயங்களை பதிந்து பதிந்து, அதுகுறித்த தாக்கத்தை மழுங்கச்செய்வதை ஒரு கனம் யோசித்தால் உணர்ந்து கொள்ள முடியும்.

முன்னொரு காலத்தில் அரைகுறை ஆடைகளும், ஆபாசசினிமாக்களும் கடும் எதிர்ப்புக்குள்ளாகின... பொதுவாக சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பை முன்வைத்தாலும், குறிப்பாக பெண்களின் போராட்டம் பேசப்படும்படியாக இருந்திருக்கிறது.
இன்று? அப்படியான எண்ணம் ஆபாசம் அரைகுறை ஆடைகளுக்கு எதிரான சிந்தனை மொத்தமாக மழுங்கிப்போய் இருப்பதை உணர முடியும்.

இதுபோன்று வன்முறையையும் சொல்லலாம்.. முன்பு வன்முறையும், கொலை போன்ற பாதகங்களும் தீயவர்களுக்கே உரித்தான ஒன்றாக சினிமா படம்பிடித்தது. இப்போது ஆன்டி ஹீரோ எனும் கதாப்பாத்திரத்தின் மூலம் கொலைகளையும்,வன்முறைகளையும், அடிதடிகளையும் சர்வசாதாரண ஒன்றாக்கிவிட்டது. நிதர்சனத்தில் இன்றைய பிள்ளைகளிடம் இதன் விளைவைக் காணமுடியும்.

இப்படி தாக்கத்தை உண்டாக்கும் சினிமா, முஸ்லிம்கள் குறித்து என்னமாதிரியாக கருத்தை பதிவு செய்தது? செய்கிறது? என்பது மற்ற சமூகத்தாருக்கு ஒரு பொருட்டாக இல்லாவிட்டாலும் சம்பந்தப்பட்ட சமூகத்தினர் அதை கவனத்தில் கொள்வதை தவிர்க்க இயலாது.

இந்த கவனஈர்ப்பு பொதுவாக எல்லா சமூகத்தாருக்கும் பொருந்தும். தன் சமூகம் குறித்து என்னமாதிரியான கருத்துருவாக்கம் வைக்கப்படுகிறது என்பதை எல்லா சமூகத்தினரும் கவனித்தே வருகின்றனர்.

பிராமணர்களை கேலிக்குள்ளாக்கும் படம் அவர்களை காயப்படுத்தாமல் இருப்பதில்லை. ஆனால் அதை பார்க்கும் மற்றவர்களுக்கோ அது வெற்று கிண்டலாகவும், மிகப்பெரிய நகைச்சுவையாகவும் இருப்பதை பார்க்கமுடியும். 

முஸ்லிம்களை இந்த சினிமா உலகு எவ்வாறு புரிந்துவைத்திருக்கிறது. மிகச்சமீபகாலம் வரை அட்டைக்குல்லாவுடன், அருவருப்பான தமிழ் பேசும் மூன்றாம்தர மக்களாகவே புரிந்து காட்சிப்படுத்தி வந்தது.

இந்த 20 ஆண்டுகளில் முஸ்லிம்களின் முகவரி உலக அளவில் என்பதைக்காட்டிலும், குறிப்பாக இந்திய அளவில் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் தீவிரவாதம் என்ற ஒன்று முஸ்லிம்களுக்கு அடைமொழியாகவே மாறிவரும் அவலநிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்றைய மதஅரசியலும், ஊடகங்களும், முஸ்லிம்களை தீவிரவாதம் என்ற நிறக்கண்ணாடி இன்றி முன்னிருத்துவதே இல்லை. 

இதன் நீட்சியாக முழுக்க முழுக்க இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தீவிரவாத சக்திகளாக சித்தரித்து முழுநீள திரைப்படம் அதிக பொருட்செலவில் அழகிய பேனரில் வெளிவருவது இஸ்லாமியர்களுக்கு என்ன இனிப்பான செய்தியா?

இந்த கருத்துப் பதிவு மக்களை சென்றடைந்தபின், தயாரித்தவருக்கு லாபம் கிடைக்கிறது. பார்ப்பவர்களுக்கு, பொழுதுபோக்கும், கூடவே காட்சிப்படுத்தப்பட்டவர்கள் குறித்து ஒரு மனத்தோற்றம் உண்டாகிறது. 

காட்சிப்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு? அந்த மனத்தோற்றத்தின் விளைவல்லவா பரிசாகிறது? 

இதை குறித்து யார் சிந்திப்பது? எடுப்பவர்களோ, பார்ப்பவர்களோ சிந்திக்க கடமைப்பட்டவர்களாக இருக்கமுடியாது. அதன் பாதிப்பை உள்வாங்கும் சமூகம், உள்வாங்கிக் கொண்டிருக்கும் சமூகம் மட்டுமே சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறது.

இன்றை இந்தப் போராட்டமும் இந்தச் சிந்தனையின் விளைவே! இந்த போராட்டம் இரண்டு முக்கிய காரணிகளை மையமாகக் கொண்டு சுழல்கிறது. ஒன்று இஸ்லாம் இன்னொன்று முஸ்லிம்கள்.

அதென்ன இஸ்லாம் முஸ்லிம்கள்? என்றால் இப்படி பிரித்தறிவிக்க போதிய காரணங்கள் உண்டு.

முதலில் இந்த திரைப்படம் இஸ்லாமிய கொள்கைகளை தீவிரவாதத்திற்கு ஆதரவான ஒன்றாக புனைகிறது. இஸ்லாத்திற்கு எதிராக உலக அளவில் முன்னெடுக்கப்பட்டுவரும் சதிகளின் நீட்சியாக இதைப் பார்க்கலாம், அல்லது இஸ்லாம் என்ற ஒன்றை சரியாக புரிந்துகொள்ளாததன் வெளிப்பாடு எனக்கொள்ளலாம்.

ஆக எதுவாயினும், பெரும்பான்மையோ சிறுபான்மையோ பரவலாக மக்கள் மத்தியில் பின்பற்றப்படும் ஒரு நெறியை, ஒரு மார்க்கத்தை தவறாக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மற்ற கொள்கைகளை பின்பற்றும் மக்கள் அதை எப்படி அணுகுகிறார்கள் என்பதில் பல்வேறு படித்தரங்கள் இருக்கலாம். ஆனால் எந்த மக்களைக்காட்டிலும் முஸ்லிம்கள் தாங்கள் சார்ந்திருக்கும் மார்க்கத்திற்கு அதன் கொள்கைக்கும் தனிச்சிறப்புமிக்க உண்ணதமான தரத்தைக்கொடுக்கிறார்கள். இதை வெறுமனே கொள்கை என்ற அளவில் பார்ப்பதைக்காட்டிலும் தங்களைப் படைத்த இறைவன், தங்கள் வாழ்வை நெறிசெய்து கொள்ள கொடுத்திருக்கும் ஒப்பற்ற வழிமுறையாக பார்ப்பதை பலரும் அறீந்திருப்பர். அப்படியான கொள்ளை எதிர்மறை கருத்துத்தோய்ந்து மக்களுக்கு காட்டப்படும் போது அதை பார்த்துக்கொண்டிருப்பது சாத்தியமில்லாத ஒன்று.

அடுத்தது முஸ்லிம்கள். முஸ்லிம்கள் என இஸ்லாத்தை பின்பற்றும் மக்களை இஸ்லாத்தில் இருந்து இந்த இடத்தில் தனிப்பட்டு பேசக்காரணம் உண்டு. இஸ்லாம் தோன்றிய இத்தனை காலத்தில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துருவாக்கம் இல்லாமல் இல்லை. எந்த மதத்திற்கும் இல்லாத அளவில் எல்லா காலத்திலும் இஸ்லாத்திற்கு எதிராக விமர்சனங்கள் இருந்தே வந்திருக்கிறது. அது சமகாலங்களில் சரியாக எதிர்கொள்ளப்பட்டும் வந்திருக்கிறது. அதுவே இன்றளவும் இஸ்லாம் புதுப்பொழிவுடன் இருக்க காரணமும் கூட..

ஆனால் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் இஸ்லாத்தையோ, முஸ்லிம்களை பெரிய அளவில் பாதித்ததில்லை. ஆனால் இன்றைய முஸ்லிம்களில் நிலை அவ்வாறில்லை. 

முஸ்லிம்களை சமூகத்தில் இருந்து திட்டமிட்டு அப்புறப்படுத்தும் பணி நூற்றாண்டுத் திட்டங்களாக, இந்தியத்திருநாட்டில் நடைபெற்றுவருகிறது. அதன் முதல் இரண்டாவது கட்டங்களாகவே இன்றைய காலம் இருந்துவருகிறது.முழுக்க முழுக்க முஸ்லிம்களை மற்ற சமூக மக்களிடம் இருந்து தனிமைப்ப்படுத்துவதும், மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் குறித்து விகல்ப்ப எண்ணங்களை விதைத்து வெறுப்புணர்வை உண்டாக்கி அதன்மூலம் முஸ்லிம்களை வேரருக்க ஒரு கூட்டம் எப்போதும் தயாராக இருக்கும் ஆபத்தான காலகட்டத்தை முஸ்லிம்கள் எதிர்நோக்கி இருப்பதே இன்றைய முஸ்லிம்களுக்கான பெரும் பிரச்சனை.

இத்தகைய காலகட்டத்தில் இப்படியான படம் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றிய கதையாகிவிடாமல் இருக்கவே இந்த மாபெரும் எதிர்ப்பும் கண்டனங்களும் போராட்டங்களும்...

இந்த போராட்டங்களை மேலோட்டமாக பார்த்து முஸ்லிம்கள் என்றாலே வெறும் போராட்டக்காரர்கள் தானா என எண்ணம் கொள்ளாமல் அவர்களது மனநிலையையும் புரிந்து  அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள் சகோதரர்களே!

சரியான காரணம் இன்றி இப்படியான போராட்டங்களை முஸ்லிம்கள் கையில் எடுக்க மாட்டார்கள். மாற்றுமத சகோதரர்கள், கமல்ஹாசனை பெரும் கலைஞனாக பார்க்கக்கூடியவர்கள், பெரும் முயற்சிக்கு முஸ்லிம்கள் முட்டுக்கட்டையாக இருப்பதாக எண்ணி வேற்றுமை கொள்ளவேண்டாம்.

எந்தக்காரணம் DAM 999 திரைப்படம் தமிழகத்தில் திரையிட தடைவிதிக்கப்பட்டதோ, அதே அளவுகோலை இந்த திரைப்படத்திற்கும் கொடுத்து ஒரு சமூகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுகிறோம்.

அன்புடன்
ரஜின்

21 கருத்துகள் :

  1. ///சினிமா: இது ஊடகங்களுக்கெல்லாம் தலை. ஒரு செய்தியை உச்சபட்சமாக மக்கள் மத்தியில் எத்தனை தூரம் எடுத்துச்செல்ல முடியுமோ அந்த எல்லையை தொட்டு, ஒரு கருத்தை மனதில் பதியவைக்கும் காத்திரமான கருவி.

    இதன் வீரியம் அலாதியானது. சாதாரணமான ஒரு நிகழ்வை தக்க கோணத்தில் காட்சிப்படுத்தி, அதற்கு பின்னனியில் பொருத்தமான வசனம், இசையுடன் கூடிய நிகழ்வாக உருவகப்படுத்தி அசாதாரணமாக்கும் வல்லமை பொருந்தியது. அப்படிப்பட்ட காட்சி ஊடகத்தில் உருவாகும் ஒரு கருத்து, மக்களை சென்றடைந்தால், அது சரியோ, தவறோ, அதன் பொருண்மை வீரியம் இழப்பதற்கு காலங்கள் ஆகும்..

    என்ன இப்டி சொல்ரீங்க இந்தக்காலத்துல யாரு சினிமா பாத்து விசயத்த மனசுல வாங்கிறா.. இது வெறும் பொழுதுபோக்கு ஊடகம். எந்திர வாழ்க்கைல சில மணிநேரம் மனஓய்வுக்கான கருவி அவ்ளோதான். அப்டி சொன்னீங்கன்னா... உண்மைதான்..

    இந்தகாலம் இல்ல, எந்தக்காலத்துலையும் யாரும் சினிமாவை பார்த்து நடைமுறை வாழ்க்கையை வடிவமைப்பதில்லை. ஆனால் அதன் தாக்கம் எதார்த்த வாழ்வின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் அச்சுப்பிசகாமல் பிரதிபலிக்கிறது என்பது மறுக்கவியலாத உண்மை.///நெற்றியடியான வார்த்தைகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸலாம் சகோ மீரா..
      உங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி..

      அன்புடன்
      ரஜின்

      நீக்கு
  2. அஸ் ஸலாமு அலைக்கும் Razin Bhai,

    DAM 999ஐ நீங்கள் இங்கே ஒப்பீடு செய்து பார்த்துளீர்கள் என்றால் விஸ்வரூபம் எதை விஸ்வரூபமாக்க முயல்கிறது என்னும் ஓர் சில்லிட்ட உணர்வு உள்ளூற ஓடுகிறது :(.

    மிக ஆழமாக, அழகாக அனலைஸ் செய்த அந்த செழுமை குன்றாமல் அப்படியே கருத்துக்களையும் பதிந்துள்ளீர்கள். பதில்தான் யாரிடத்திலும் இல்லை :(

    கமல ஹாசனுக்கு மட்டுமல்ல, திரையுலகத்திற்கே மனநலம் சீக்கிரமே திரும்பி வர வேண்டும் என பிரார்த்திப்போம்....ஏனெனில் இப்போது வெளி வரும் ஒவ்வொரு படமும் சினிமாத்துறையின் டிப்ரஷன் நோயைத்தான் களம் காண்வதாக இருக்கின்றன. அல்லாஹ் காத்தருள்வானாக.

    அடிக்கடி எழுதுங்க பாய் :)

    வஸ் ஸலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வ அலைக்கும் ஸலாம் சகோ உம்ம் உமர்.

      தங்களின் வருகைக்கும் வாசிப்பிற்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ...இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எழுத முயல்கிறேன்.

      அன்புடன்
      ரஜின்

      நீக்கு
  3. //எந்தக்காரணம் DAM 999 திரைப்படம் தமிழகத்தில் திரையிட தடைவிதிக்கப்பட்டதோ, அதே அளவுகோலை இந்த திரைப்படத்திற்கும் கொடுத்து ஒரு சமூகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுகிறோம்.//
    Good ending!!! Well done brother !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸலாம் சகோ பீர் முஹம்மது.

      தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ,,,

      அன்புடன்
      ரஜின்

      நீக்கு
  4. நன்றாக புரிந்து கொள்ளுங்கள். எதிர்ப்பாளர்கள் எதிர்ப்பது கமலையோ, விஸ்வரூப படத்தையோ அல்ல. படத்தில் இடம்பெறும் இஸ்லாமிய மதம் மீதான, குரான் மீதான தவறான கருத்துக்களைத்தான். வெறும் சினிமாதானே என்று பிற்போக்கு கேள்வி தொடுக்காதீர்கள். சினிமாவும் ஒரு ஊடகம்தான். தனது படங்களில் திரும்ப திரும்ப இஸ்லாமியத்தை கமல் அவர்கள் சாடுவதன் பின்னணி புரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஸ்கார் ஆசைதான்... அமெரிக்க இல்லுமினட்டிகளுக்கு அடிமை சேவகம் செய்து ஆஸ்கார் வாங்க முயற்சி செய்யுறார்...

      நீக்கு
    2. ஆஸ்கார் ஆசைதான்... அமெரிக்க இல்லுமினட்டிகளுக்கு அடிமை சேவகம் செய்து ஆஸ்கார் வாங்க முயற்சி செய்யுறார்...

      நீக்கு
  5. முஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?

    இன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: " இவர்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?"

    போராட்டக்காரர்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தரும் கேள்வி இதுதான்.

    உண்மையில் போராட்டக்காரர்கள் ஆரம்பத்திலிருந்தே போராட்ட களத்தில் நின்றிருப்பார்கள். ஆனால் அந்த வரலாறெல்லாம் தெரியாமல் கணினியும் இணையதள வசதியும் வைத்துக்கொண்டு கேள்விக்கணை தொடுப்பார்கள்.

    இதுபோன்று பல கேள்விகளை வரலாறு தெரியாமல் கேட்டுக்கொண்டு குழப்பத்தை விளைவித்துக்கொண்டே இருப்பதுதான் இவர்கள் வேலை.

    தானும் போராட களத்திற்கு வரமாட்டார்கள். போராடுபவர்களையும் ஆதரிக்கமாட்டார்கள்.

    ஒரு மூலையில் கணினியில் அமர்ந்து கொண்டு சேகுவேரா ரேஞ்ச்சுக்கு புரட்சி செய்வார்கள் (சேகுவேரா மன்னிக்கவும்)

    இப்போது விசயத்துக்கு வருவோம்.

    விஸ்வரூபம் திரைப்படத்தை எதிர்க்கும் இஸ்லாமிய அமைப்புகள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?

    இதுதான் இப்போது பல அதிமேதாவிகளின் கேள்வி.

    அந்த அதிமேதாவிகளுக்கு பதில் நான் சொல்கிறேன்.



    சொடுக்கி படிக்கவும் >>>>>
    முஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?

    பதிலளிநீக்கு
  6. முஸ்லிம் தலைவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக தடை கோரி உள்ளனரா.?

    படம் பார்த்த முஸ்லிம் தலைவர்கள் அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக இவ்வாறு செயல்படுகிறார்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது ...ஏனெனில் இந்திய வரலாற்றிலேயே இதைப்போல் இஸ்லாத்தை கேவலப்படுத்த வில்லை என்கின்றனர்..தவிர துப்பாக்கி படம் போல சில காட்சிகளை நீக்க சொல்லி சொல்லவில்லை..படத்தையே தடை செய்ய வேண்டும் என்று சொல்வதிலேயே விபரீதத்தை உணர முடிகிறது..!

    இதற்கும் மேல் முஸ்லிம் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று கமல் அவரின் படத்தை போட்டு காட்டியது சிறந்த செயல்..முஸ்லிம்கள் நன்றி பாரட்ட்க்கூடியவர்கள் ..அதை பாராட்டி அதையும் பொருட்படுத்த முடியாமல் தடை கேட்க வேண்டிய அளவுக்கு பேசுகிறார்கள் என்றால் நிச்சயம் பிரச்சனையின் விபரீதத்தை நமக்கு தெரிவிக்கிறது..!

    பதிலளிநீக்கு
  7. //
    எந்தக்காரணம் DAM 999 திரைப்படம் தமிழகத்தில் திரையிட தடைவிதிக்கப்பட்டதோ, அதே அளவுகோலை இந்த திரைப்படத்திற்கும் கொடுத்து ஒரு சமூகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுகிறோம். //

    சரியா சொல்லி இருக்கீங்க சகோ.. எக்ஸலன்ட் ஆர்டிகள்... மாஷா அல்லாஹ்... என் சகோதரனின் அறிவுத் திறனைக் கொண்டு பெருமிதம் கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
  8. SALAM,

    முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும்-கருத்துகணிப்பு:
    இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் இனிவரும் காலங்களில் எதிர்வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வழிகாட்டுதலுடன் தான் முன் செல்கிறோமா?உங்களின் கருத்துகளை அவசியம் பதிந்து நம் சமுகத்திற்கு நேரான வழியில் செல்ல உதவுங்கள்.

    கருத்துக்களை இக்கட்டுரையில் பதியவும்:http://tvpmuslim.blogspot.in/2013/01/muslimkal-ethil-kavanam-seluththavendum-tamil-survey.html

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. மிக மிக தவறான சொற் பிரயோகம். தயவுசெய்து இந்தப் பதிவை நீங்களே நீக்கிவிடுங்கள்.

      நீக்கு
    2. மிக மிக தவறான சொற் பிரயோகம். தயவுசெய்து இந்தப் பதிவை நீங்களே நீக்கிவிடுங்கள்.

      நீக்கு
    3. ஸலாம் சகோ ராஜா.. நன்றி..

      இது போன்ற வார்த்தைகளை நான் கண்டுகொள்வதில்லை..அல்லது அதற்கு அழகாக பதில் கொடுத்தே பழக்கம்...
      இந்த வார்த்தை உங்களுக்கு தவறாக பட்டதில் மகிழ்ச்சி...

      அன்புடன்
      ரஜின்

      நீக்கு
  10. மிக சிறப்பான பதிவு நிதானம் தவறாத எழுத்துநடை
    ஊடகங்கள் மக்களை சிந்திக்க விடுவதில்லை மக்களுக்காக இவர்கள் சிந்திக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்

    தவறான் ஊடகம் தவறான சிந்தைகளை கொடுக்கும் போது விழிப்புணர்வு அடைந்து அதை அகற்ற போராடுவது என்பதை சரியான வழிமுறை என்பதை நாம் அணைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்

    பதிலளிநீக்கு
  11. First change the name from sunmargam to Thunmargam.

    Anyway we will see this movie. Either in youtube, or in theater or thiruttu vcd or in telugu or Hindi. YOU CAN NEVER STOP IT.

    We will understand the movie, understand its intentions and spread its message everywhere across the world. There is something in it , which makes you shiver. The message of Vishwaroopam will be spread far and wide!!!!

    Every Kaafir Tamil will watch and make sure its message is spread across their homes.

    பதிலளிநீக்கு
  12. பாரம்பரிய தமிழ் கலாச்சாரம், தமிழார்வம், தமிழிலக்கிய தொண்டு, தனித்தன்மையான வட்டார மொழி வழக்குகள், என்றெல்லாம் தமிழக முஸ்லிம்களுக்கென்று வரலாறுகள் இருந்தாலும், தமிழ் சினிமா இன்னும் " நம்பள்கி, நிம்பள்கி" என்று தமிழை தப்புத்தவறாய் பேசும் அந்நியர்களாகத்தான் முஸ்லிம்களை பதிந்து வருகிறது. ஏன் இந்த சித்தரிப்பு?

    முஸ்லிம்களை நல்லவர்களாகவும் அல்லது வில்லன்களாகவும், நண்பர்களாகவும் காட்டிய காலம் போய், தீவிரவாதிகளாகவும் காட்டினார்கள். முஸ்லிம்களில் தீவிரவாதிக்கா பஞ்சம்? பொறுத்துக்கொண்டோம். ஒரு தனிப்பட்ட மனிதனை எப்படி வேண்டுமானாலும் காட்டலாம். அதெல்லாம் கருத்துச்சுதந்திரம்.

    இந்நிலையில், தொடர்ந்து ஒரே மாதிரியாக விஜயகாந்தும், அர்ஜுனும் இன்ன பிற...ரது படங்களிலும், தீவிரவாதி என்றால் முஸ்லிம்கள் என்று பொதுப்புத்தியில் ஆணி அடிப்பது போல திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வந்தது. சங்கடமாக இருந்தாலும் எதிர்க்கும் அளவு சூழ்நிலை இல்லை. குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்டதெல்லாம் முஸ்லிம்களே. ( நன்றாக அவதானிக்கவும் "கைது செய்யப்பட்டது" என்று தான் குறிப்பிட்டிருக்கேன்)

    சமீப காலமாக, குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் எல்லாம் அப்பாவிகள் என்று நீதி மன்றத்தால் பல ஆண்டுகளை சிறையில் இழந்து விட்டு நிரபராதியாக வெளியே வருகிறார்கள். இவர்கள் நிரபராதி என்றால் யார் குற்றவாளி?? என்று ஆராயும் போது, அதே குண்டு வெடிப்புகளுக்கு "இந்துத்துவ தீவிரவாதிகள்" கைது செய்யப்பட்டு வருவதும், முன்னாள் உள்துறை அமைச்சர் "காவி தீவிரவாதம்" என்று ஒன்று இருப்பதாக நாடாளுமன்றத்திலே ஒத்துக்கொண்டதும், அதனை தொடர்ந்து தற்போதைய அமைச்சர் ஷிண்டே வும் பிஜேபியும், ஆர்.எஸ்.எஸும் பயங்கரவாத பயிற்சி முகாமே நடத்துகின்றன என்கிறார்.

    இந்த சூழ்நிலையில் தான் "துப்பாக்கி" திரைப்படம் தனது வழமையான "முஸ்லிம் தீவிரவாதி" என்ற லேபிளுடன் வருகிறது. அதில் உச்சக்கட்ட அதிர்ச்சி. அதில் ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம் சமூகத்தையே சந்தேகப்படுத்தும் வகையில் "ஸ்லீப்பர் செல்" என்ற புதுவகையான உத்தி கையாளப்படுகிறது. தீவிரவாதி ஒரு சாதுவாக மக்களோடு மக்களாக கலந்தே இருப்பான், ராணுவத்திலும் உயர்பதவிகளிலும் கூட கலந்திருக்கலாம் என்ற விஷ விதையை தூவி விடுகிறார்கள். இது ஒரு அப்பட்டமான முஸ்லிம் எதிர்ப்புப்படம் என்று முஸ்லிம்கள் உணருகிறார்கள். ஏற்கனவே இந்துத்துவாவின் குண்டு வெடிப்புகளுக்கு தாங்கள் தீவிரவாத பட்டமும் பழியை சுமக்க நேரிட்டு வருகிறதே என்ற இயலாமையும், ஒவ்வொரு குண்டு வெடிப்பு வழக்குகளிலும் காவி தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையிலும், மேலும் மேலும் எங்களையே இந்த சினிமாவினர் குற்றம் சுமத்தி வருவது யாரை திருப்தி படுத்த என்று ஒரு இயல்பான கொந்தளிப்பு முஸ்லிம்களிடையே உருவாகிறது. அதனால் துப்பாக்கியை எதிர்க்க துவங்குகிறார்கள்.

    பொதுவாக ஒரு சமூகத்திற்கு எதிராக இது மாதிரி ஆபத்து வரும் போது எல்லோரும் ஒன்றிணைவது இயல்பே. சண்டையிட்டு பிரிந்து கிடந்தவர்களெல்லாம் ஒரு கருத்திற்காக (துப்பாக்கியை எதிர்ப்பது) ஒன்றிணைகிறார்கள்.எதிர்ப்பு தமிழ் முஸ்லிம் சமூகம் காணாதது. அந்தக் கொதிப்பு அடங்கும் முன்னே (இதில் நீர்பறவையில் சமுத்ரகனியின் பேச்சு முஸ்லிம்களுக்கு பெரிய ஆறுதல்) விஸ்வரரூபமும் தீவிரவாதத்தை கதைக்கருவாகக் கொண்டு வரவே, சொல்ல வேண்டுமா எதிர்ப்புக்கு!!

    இந்துத்துவாவினர்களின் குண்டு வெடிப்புகளுக்கும் சேர்த்தே தீவிரவாதி பட்டம் சுமந்தாகி விட்டது. இந்த சமூகத்தின் வலியையும் வேதனையும் புரிந்து கொள்ள முயலுங்கள். கமல் எங்களுக்கு எதிரியல்ல; துரதிஷ்டவசமாக விஸ்வரூபத்தின் கதைக்களம் ஆப்கனில் நடப்பதால் கமலுக்கும் வேறு வழியில்லை. இது தொடராமல் இருக்க வேண்டுமானால், எங்களுக்கும் இதற்கு வேறு வழியில்லை.

    பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்