புதன், நவம்பர் 24, 2010

லிவ்விங் டு கெதர் = விபச்சாரம்

23 கருத்துகள் :
லிவிங் டு கெதர்:

இது குறித்து பரவலாகவே,பதிவர்கள் ஆதரவாகவும்,எதிராகவும், தங்களது கருத்துக்களை பதிந்து வர.நானும்,என் பங்குக்கு,எனது கருத்தையும் சொல்லிவிடலாம் என முடிவெடுத்துவிட்டேன்.

லிவ்விங் டு கெதர்.அதாவது.ஆண் பெண் இருவரும் திருமணம் இன்றி,ஒன்றாக வாழ்வது.பிடித்து இருந்தால் சேர்ந்து வாழ்க்கை தொடரும்,இல்லை என்றால்,அவர் அவர் வழியை அவரவர் பார்த்துக் கொண்டு சென்றுவிடுவது.பிறகு,திரும்பவும் அவரவர் விரும்பியவருடன் வாழ்வை ஆரம்பித்துவிடுவது.

சற்றே இவ்விடயத்தை சிந்தித்தால்,இது விலங்குகளின் வாழ்வு முறையை ஒத்து காணப்படும். இதில் பல விலங்குகள் கூட ஒரு துணையுடன் வாழும் பண்புடையதாக இருக்கிறது.

மனிதனுக்கும்,விலங்குகளுக்கும்,அடிப்படையில் வேறுபாடு காணப்படுவது பகுத்தறிவு எனும் மேலான சிந்தனைத்திறனால்.அது தவிர்த்தும்வெட்க உணர்வு,பேச்சு,உறவுகள்,வாழ்க்கை முறை, என பல விடயங்களில் நாம் அவைகளில் இருந்து வேறுபடுகிறோம்.

சனி, நவம்பர் 20, 2010

வெறுப்புணர்ச்சி - ஜிஹாத் - பகுதி 2

11 கருத்துகள் :

இன்று உலகில் இஸ்லாமிய பெயர்தாங்கிகளால் முன்னிருத்தப்படும் அத்துனை வன்முறைகளும் ஜிஹாத்,என்ற டைட்டில் இல்லாமல் செய்யப்படுவதில்லை.இதுவல்லாது இஸ்லாமியர்களால் செய்யப்படும்,வேறுசில வன்முறைகளுக்கும்,தாராளமாக ஊடகங்கள் ஜிஹாத் என்ற லேபிள் ஒட்டியே மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன.

ஜிஹாத் குறித்து பிறமத சகோதரர்களின் தெளிவு எப்படிப்பட்டதெனில்......
ஜிஹாத் என்றால் என்ன?புனிதப்போர்...யார் செய்வது? இஸ்லாமியர்கள்.., கொல்லப்படுவது? அப்பாவி மக்கள்.....so இஸ்லாமிய புனிதப்போர்கள் அனைத்தும் அப்பாவி மக்களை கொல்லவதே. 
இது மட்டுமே ஜிஹாத் குறித்து பிற மக்கள் கொண்டுள்ள அபிப்ராயம்.அவர்களுக்கு இது போதுமானது.மேலும் இது குறித்த உண்மை நிலையை யாரும்,அவர்களிடம் கொண்டு சேர்க்காதிருக்க,இஸ்லாமிய எதிரிகளின் பிரச்சாரத்தை மட்டுமே எதிர்கொண்ட மக்களின் மனநிலை அதுவாக இருப்பதை குற்றப்படுத்த இயலாது.

சரி: ஜிஹாத் என்றால் என்ன? 

சனி, நவம்பர் 13, 2010

அரவிந்தன் நீலகண்டன்களுக்கு சில கேள்விகள்!

4 கருத்துகள் :
சமீபத்தில் ஹிந்து(த்துவா)க்களால் மிகவும் வரவேற்கப்பட்ட அரவிந்தன் நீலகண்டனின் உண்மையான கரசேவை என்ற "கட்டு"ரையை படிக்க நேர்ந்தது.

தீர்ப்புக்கு முன்னரே அவர்களது சேவைகளை சரியெனச் சொல்லிவந்தாலும்,அதுவரை யாரும் பாபர் மசூதி இடிப்பை வெளிப்படையாக நியாயப்படுத்தவில்லை.

அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு,அவர்களுக்கு சாதகமானதை தொடர்ந்து,அவர்களது வன்ம வார்த்தைகள் அந்த கருமம் பிடித்த சேவையால் இந்திய தேசத்திற்கு நிகழ்த்தப்பட்ட மாபெறும் அவமானத்தை நியாயப்படுத்த துவங்கி விட்டார்கள்.

இதோ.இந்திய தேச இஸ்லாமியர்களின் இரத்தத்தில் துவைத்து வண்ணமேற்றிய காவிக்கொடியுடன் நாடெங்கும் ர(த்)த யாத்திரை கொண்டு,மாபெறும் இன அழிப்பை நிகழ்த்திய அத்வானி,இத்தீர்ப்பிற்கு பிறகு "தனது யாத்திரை சரியாது தான்"என திருவாய் மலர்ந்து இருக்கிறார்.

இதே தான் அரவிந்தனின் நிலைப்பாடும்.அத்வானி ஆயிரம் தலைவாங்கிய ரதயாத்திரையை நியாயப்படுத்துகிறார்.அரவிந்தன்,அதன் பின் நடந்த தேச அவமானமான மஸ்ஜித் இடிப்பை நியாயப்படுத்துகிறார்.

ஞாயிறு, அக்டோபர் 31, 2010

ஹிந்து மதம் - சில கேள்விகள்

28 கருத்துகள் :
ஒரு சகோதரரின் தளத்தில் நடந்த பின்னூட்ட கலந்துரையாடலில்,இஸ்லாம் மற்றும் ஹிந்துமதத்தின் வரையறைகளை பற்றி விவாதித்தோம்.



அப்போது எனக்கு ஹிந்துமதத்தின் வரையறை பற்றி எழும்பிய சில கேள்விகளுக்கு விளக்கம் கேட்டிருந்தேன்..பதில் இல்லை.எனவே அந்த கேள்விகளை பொதுவில் வைத்தால்,விருப்பம் உள்ள ஹிந்து சகோதரர்கள் பதில் தர ஏதுவாகுமே என அவற்றை இங்கே பதிக்கிறேன்...


உலகில் உள்ள எந்த மதமாகட்டும்,அல்லது இஸங்கள் ஆகட்டும்,சில கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்படுகிறது,அந்த கொளகையில் பிடிப்பு உள்ளவர் அந்த குறிப்பிட்ட மதத்தையோ,அல்லது அந்தந்த இஸங்களையோ சார்ந்தவராவார்.

வியாழன், அக்டோபர் 28, 2010

வெறுப்புணர்ச்சி - ஜிஹாத் - பகுதி 01

4 கருத்துகள் :





இஸ்லாம் - உலக வரலாற்றை பொருத்தவரை சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, உலகம் முழுவதிலும் வியாபித்து,இன்று அனைத்து மக்களாலும்,கவனிக்கப்படும் மார்க்கம் என்றால் அது இஸ்லாமே.இன்னும் உலகில் உள்ள மதங்கள் அனைத்திலும் அதிகம் விமர்சனங்களை எதிர்கொண்டுவரும் மார்க்கமும் இஸ்லாம் தான்.

கடந்த நூற்றாண்டு வரை இஸ்லாம் குறித்த உள்விவகார விமர்சனங்கள் பிறரிடம் இருந்தும்,அது தன்னை பாதிக்காது இருந்த காரணத்தால், பெரிய அபிப்ராயம் இல்லாதிருந்த உலகு இன்று,இஸ்லாத்தின் மீது தனது பார்வையை திருப்ப மிக முக்கிய காரணமாவது, இஸ்லாத்தை முன்னிறுத்தி,செய்யப்படும் தீவிரவாதங்கள் என்றால் மிகையாகாது.

தீவிரவாதங்கள் மூலம் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது,இஸ்லாத்தின் பெயரால் நியாயப் படுத்தப்படுவதால்,இன்று பிறமத சகோதரர்களின் உள்ளத்தில்,இஸ்லாம் பிறமதத்தினரை எப்படி அணுகுகிறது,அது பிற மக்களின் மீது வெறுப்புணர்ச்சியையும்,துவேஷத்தையும் முஸ்லீம்களிடம் வளர்க்கிறதா? என்ற கேள்வி எழுகின்றது.

செவ்வாய், அக்டோபர் 12, 2010

பாபர் மசூதி தீர்ப்பு - சாதக பாதகம் ஒரு பகிர்வு

16 கருத்துகள் :

(முன்னால்) பாபர் மஸ்ஜித்" தீர்ப்பு பற்றி அரசியல்வாதிகள்,சமூகநல ஆர்வலர்கள்,மத தலைவர்கள்,பத்திரிக்கைகள் என பலரும் தங்களது கருத்தை பதிவு செய்கின்றனர்.இதில் சிலர் தீர்ப்பானது,கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு எனவும்,சிலர் சரியானது எனவும் மதிப்பிடுகின்றனர்.

பொதுவாக சில விடயங்களில் அனைவருக்குமே இருவேறு கருத்து இருக்கும்.முழுவதுமாக இது சரி,இல்லை தவறு என சொல்ல இயலாத சூழல் உண்டாகும்.இத்தீர்ப்பை பொருத்தமட்டில் பெரும்பகுதி ஏமாற்றம் மற்றும்,அற்ப ஆறுதல்என இருவேறு கருத்தோட்டம் என்னில உண்டு.

Counter

பிற பதிவுகள்