வியாழன், அக்டோபர் 15, 2009

இஸ்லாம் பெண்களையும்,குழந்தைகளையும்,போரில் கொல்ல அனுமதிக்கிறதா?....

சகோதரர் திருச்சிக்காரன்(சுந்தர்) அவர்களது கேள்வியும்,எனது பதிலும்....

//இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் சிறுவர்களும் சேதமடையும் பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சார்ந்தவர்களே” என்று பதிலளித்தார்கள். (நூல் - புகாரி, 3012).//


//இந்த விசயத்திலே இதைப் படிக்கும் யாரும், பெண்களும் , குழைந்தைகளும் கூட காபிர் தான் அதனால் அவர்களைத் தாக்க தயங்காதே என்றே பொருள் கொள்ளவார்கள்.//
//இவ்வாறாக இன்னும் பல வஹீகள் உள்ள நிலையில், இஸ்லாம் என்பது உலக அமைதிக்கு பேராபத்தை விளைவிக்கும் ஒரு மார்க்கமாக பலரும் கருதும் கருத்துக்கு மாறாக நாம் எதுவும் சொல்ல முடியாத நிலையிலேயே இருக்கிறோம்.//
எனது பதில்:


சகோதரர் திருச்சிக்காரன் அவர்களே,
தங்களின் இந்த கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன்,அது பற்றி,முழுமையாக ஆராயக் கடமைப் பட்டுள்ளேன்,ஏனென்ரால்,இஸ்லாத்தில் நான் ஒரு மாணவனே,கற்றுள்ளேன்,இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன்...
போர் சம்பந்தமான ஹதீஸ்களை பார்க்கும் போது,நபியவர்கள் காலத்தில் நடைபெற்ற போர்களுக்கான,ஹதீஸ் ஆதாரங்களில்,ஒன்று கூட மேற் சொன்ன ஹதீஸுக்கு சாதகமான அறிவிப்பை கொண்டு இல்லை....
நபியவர்கள் காலத்தில்,நடந்த எந்த போர்களும் இந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட வில்லை.பிறகு ஏன் இது போன்ற ஒரு சந்தேகத்தை நபித்தோழர்கள் கேட்டு,அதற்கு,நபி (ஸல்) அவர்களும் இசைவதைப்போல் பதில் அளித்தார்கள் என பார்ப்போம்.


இஸ்லாமிய அரசு கட்டமைக்கப்பட்ட காலத்தில், யாத்ரிப் (மதீனா)நகரம், இஸ்லாமிய தலைமையகமாக விளங்கியது,அதை சுற்றியுள்ள,எதிரிகள் யூத கிறிஸ்தவர்களாகவும்,கிராமத்து அரபிகளாகவும் இருந்தனர்...
இவர்களில்,யூதர்கள் முஸ்லிம்களுடன் நண்பர்களாக பழகிக் கொண்டே அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதில் வல்லவர்கள்,இன்னும் சிலர் வெளிப்படையாகவே எதிப்பை காட்டி முஸ்லிம்களை நேரடியாக எதிர்கொள்ளும் திறன் கொண்டு இருந்தார்கள்.வேறு சிலர்,சிறு குழுக்களாக வாழக்கூடியவர்கள்,அவர்களுக்கு எந்த ஒரு நிலையான இருப்பிடமும் இருந்திருக்கவில்லை,


இவர்களில் நாடோடி வாழ்வு வாழ்ந்த கடைசிப் பிரிவினர்,முஸ்லிம்களுக்கு எதிராக குழப்பம் செய்வர்.பின்பு அவர்களுக்கு எதிராக,படைப்பிரிவு அனுப்பப் பட்டால்,அதை எதிர்கொள்ளாது, இடம்பெயர்ந்து சென்றுவிடுவர்,அல்லது,அது சமயம் குகைகளிலும்,மலைக் கணவாய்களிலும் மறைந்துகொள்வர்.இப்படிப் பட்டவர்களின்,செயல்களை கட்டுப்படுத்த,இரவு நேரத்தாக்குதல் தவிர வேறுவழி இருந்திருக்க வாய்ப்பில்லை.


மேலும் அந்த நபிமொழியை ஆதாரமாக கொண்டு,எந்த ஒரு தாக்குதல் சம்பவமும் நடந்ததற்கான ஹதீஸ் ஆதாரங்களையும் நான் காணவில்லை.


எனவே மெற்கண்ட அந்த ஹதீஸை நாம் விதிவிலக்காகவே கருத முடியும்... 


//இவ்வாறாக இன்னும் பல வஹீகள் உள்ள நிலையில், இஸ்லாம் என்பது உலக அமைதிக்கு பேராபத்தை விளைவிக்கும் ஒரு மார்க்கமாக பலரும் கருதும் கருத்துக்கு மாறாக நாம் எதுவும் சொல்ல முடியாத நிலையிலேயே இருக்கிறோம்.//


இதை தங்களின் சொந்தக் கருத்தாகவே எண்ணுகிறேன்.


அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் (போருக்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டு அங்கு இரவு நேரத்தில் போய் சேர்ந்தார்கள்.அவர்கள் ஒரு சமுதாயத்தின் மீது இரவு நேரத்தில் படையெடுத்து செல்வார்களாயின்,காலை நேரம் வரும் வரை அவர்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள்.
ஸஹீஹுல் புஹாரி:பாகம் : 3,ஹதீஸ் எண்: 2945 



மேலும் எல்லாக் காலங்களுக்கும் பொருத்தமான மேற்கண்ட ஹதீஸயே,நாம் இதற்கு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்....


மேலும் இது போன்ற இரவு நேரத்தாக்குதல் நடந்து,பெண்களும்,குழந்தைகளும் முஸ்லிம்களால்,கொல்லப்பட வில்லை என அறுதியிட்டுக் கூற முடியும்....


மேலும் ரஹ்மத்துல்லாஹ் போன்றவர்கள்,ஆதாரமாக காட்டும் ஹதீஸ் 3012,3013.....
ஆனால் அதை தொடர்ந்து வரும் 3014,3015 எண் கொண்ட ஹதீஸ்களை அவர்கள் பார்க்காமல் விட்டது,என்ன உள்நோக்கத்தின் அடிப்படையில் என எனக்கு விளங்கவில்லை....


அவை:
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்,
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப் பட்டாள்.அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும்,குழந்தைகளையும்,கொல்வதை "கண்டித்தார்கள்".
ஸஹீஹுல் புஹாரி:3014


 இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப் பட்டாள்.அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும்,குழந்தைகளையும்,கொல்வதை "தடைசெய்தார்கள்".
ஸஹீஹுல் புஹாரி:3015


தாங்கள் மேற்கோல் காட்டும் அந்த ஹதீஸை அடுத்தே,மேலே நான் குறிப்பிட்டு இருக்கும் 3014,3015 ஆகிய ஹதீஸ்கள்,முக்கியத்துவத்துடனே,பதியப்பட்டுள்ளது.
இது முந்தய ஹதீஸை தவறான உதாரணமாக மக்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது,என்ற கருத்தை  தாங்கி நிற்கிறது....
சகோதரரே,இந்த நிலை,எல்லா காலகட்டங்களிலும்,வாழும் சமூகத்தினருக்கு விதிவிளக்காக அமைவதே......அதை கருவாக கொள்வது அறியாமையே.....அறிவுடமையாகாது......




சகோதரர் திருச்சிக்காரன் அவர்களே,
எந்த நிலையிலும்,நபி(ஸல்) அவர்கள் மனித நேயத்துடனேயே நடந்துள்ளார்கள்,அவர்களின் நேர்மையினை,பல்வேறு காலகட்டங்களில் அவர்களது எதிரிகளே புகழ்ந்துரைக்க காணலாம்...


நன்றி


அன்புடன்
ரஜின்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்