பாகம் 01 , பாகம் 02
ராதிகாவோ..தன் நீண்ட அமைதியும்,பதில் பேசாமலிருப்பதும்,தான் பர்தாவின் கூற்றை
ஏற்கும் நிலைக்கு வந்துவிட்டோமோ,என சுதாரித்து...உடம்ப மறைக்கிறெதெல்லாம் சரி..ஆனா
அவங்கவங்க போட்டுக்கிற ட்ரெஸ்ஸ அவங்க தேர்வு செய்ய உரிமை இருக்கு... இதுதா என்னோட
கருத்து.இதுல எந்த மாற்றமும் இல்ல..என தன்னை அந்தக் கருத்தில் இருந்து மீட்டுக்கொள்ள முயன்றாள்...(பாகம் 02)
ரொம்ப சரியா
சொன்ன ராதி.. நிச்சியமா என்னோட கருத்தும் அதுதான்.நம்ம ட்ரெஸ்ஸ நாம தேர்வு செய்ய
முழு உரிமை நமக்கே.. சரி நீ உன்னோட ட்ரெஸ்ஸ தேர்வு செய்யிர, நல்லதாவே... ஓக்கெ... அதேமாதிரி நம்ம ஃபேஷன் குயினையும், அவங்க விருப்பத்துக்கே ட்ரெஸ் செலக்ட் பண்ண
சொல்லிடலாமா? என அவர்களது வகுப்பிற்கு வரும் ஒரு ஆசிரியை குறித்துக் கேட்டாள் ஹதிஜா.. உனக்கு ஏண்டி இந்த வம்பு? அவங்க
போடுரதெல்லா ட்ரெஸ்ஸா?? அந்தந்த ப்ரொஃபஷன்க்குன்னு ஒரு மரியாத இல்லயா? என ராதிகா
மறுதலித்தாள்...ஏன்? என்ற ஹதிஜாவின் கேள்விக்கு, ஆசிரியர்
பணி புனிதமானது, அவக இந்த வேலைல இல்லைன்னா, என்னவேண்ணா போட்டுக்கலாம்.. என்றாள் யோசனையாய்...