புதன், அக்டோபர் 14, 2009

சகோதரர் ராம் அவர்களுக்கு எனது பதில்....



////சகோதரர்களே…
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவன்,முதலில்,மனிதனே அல்ல…பின்பு எப்படி அவன் முஸ்லிமாக இருக்க முடியும்,இந்தியாவில், வசித்துக்கொண்டு, அதன் பாதுகாப்பில் இருந்துகொண்டு,அதன் நலன்களை அனுபவித்துக் கொண்டு,அன்னிய நாட்டிற்கு ஆதரவு தருபவன், நயவஞ்சகன்….அவனும்,அப்படி செய்ய தூண்டுபவனும்,முஸ்லிம் அல்ல…///

ஆனால் செய்கிறார்களே, அவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்?
///லவ் ஜிகாத்,இந்த பெயரை,முதன் முதலில்,பவானி காதலிக்கிறால்,என்ற, பதிவில்,தான் கேள்விப்படுகிறேன்…
முதலில்,இது போன்ற,நோக்கத்துடன் செயல்படுபவன் முஸ்லிம் அல்ல…///

ஆனால் செய்கிறார்களே, அவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்?
இப்படி அவன் முஸ்லீம் அல்ல என்று கூறிவிடுவது சூப்பர் எஸ்கேபிஸம் தவிர வேறில்லை.
அப்படி முஸ்லீம் அல்லாத ஒருவரை ஏன் நீங்கள் மதத்தில் வைத்திருக்கிறீர்கள். கொயம்பத்தூரில் குண்டுவைத்ததாக தண்டனை பெற்ற முஸ்லீம் குற்றவாளிகளை உங்கள் மதத்திலிருந்து நீக்கி விட்டீர்களா? அதுவும் இல்லை. அப்புறம் நீங்கள் சொல்வது சால்ஜாப்புதானே!
இப்படித்தான் ஒரு கிறிஸ்தவ மத மாற்ற நண்பரிடம் விவாதித்துக் கொண்டிருந்தேன், ஒரு கண்ணத்தில் அடித்தால் எதிரிக்கு மறுகண்ணத்தையும் காட்டு என்று சொன்ன ஏசுவை பின்பற்றும் புஷ் ஆப்கான் மற்றும் ஈராக்கில் அத்தனை மக்களை கொன்றானே அப்போ கிறிஸ்துவம் தோற்றது தானே? என்றேன், அதற்கு அவர் கிறிஸ்து அவனுக்குள் இருந்திருந்தால் அப்படி செய்திருக்கமாட்டான். கிறிஸ்துவாக புஷ் இல்லை என்று சொல்லிவிட்டார்.
உங்களைப் பொறுத்தவரை ஜிகாத் என்ற பெயரில் குண்டுவைப்பவன் முஸ்லீம் இல்லை என்று எஸ்கேப் ஆகிவிடுவீர்கள். அவர்களைப் பொறுத்தவரை கொலைபாதகன் கிறிஸ்துவன் இல்லை என்று கூறி எஸ்கேப் ஆகிவிடுவார்கள். உங்களுக்கு இடையில் இந்துக்கள் சாக வேண்டும்.
அதர்மம் செய்பவனுக்கு தர்மப்படியான போர் சரிப்பட்டு வராது என்று துரியோதனனை தொடையில் அடித்து வீழ்த்த சொல்லிக்குடுத்த கிருஷ்ணனின் வழியே சிறந்தது இந்தக்காலத்திற்கு என்று இந்துவுக்கு படுகிறது. அப்படி செய்துவிட்டால் இந்துத்தீவிரவாதம் என்று சொல்லி இன்னும் எங்களை ஏறி மிதிப்பீர்கள்.
மத்தளமானது இந்து மதம். மத்தளத்தை கொட்டிவிட்டு சத்தம் மட்டும் கேட்கக்கூடாது என்கிறீர்கள். அது எப்படி சாத்தியம்?

--------- ----------- ----------- -------------- --------------------- ------------- ------------- ---------- -------------- ----------
எனது பதில்:
சகோதரர் ராம் அவர்களே.
அவன் செய்தானே,அவனை என்ன செய்யப் போகிறீர்கள்,….இந்த கேள்வி நீங்கள் இந்திய அரசை பார்த்து கேட்டால் பொருத்தமாக இருக்கும்,நானோ,கமல் சொல்வது போல காமன் மேன்,அவ்வளவு தான்.நீங்களும்,காமன் மேன் எனவே நம்புகிறேன்…..
ஒருவன் தவறு செய்தால்,அவனை ஒட்டுமொத்த சமுதாயத்தின்,தார்மீக பொருப்பு கொண்ட பிரதிநிதியாக பார்க்கும்,தங்களது பார்வை,தவறானது….
// ஏசுவை பின்பற்றும் புஷ் ஆப்கான் மற்றும் ஈராக்கில் அத்தனை மக்களை கொன்றானே அப்போ கிறிஸ்துவம் தோற்றது தானே? என்றேன்//
என்ன ஜார்ஜ் புஷ் கிறிஸ்தவ மதத்தை தோற்றுவித்தவரா? அல்லது,கிறிஸ்தவ மததை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டாரா?
அவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்,அவர் அதை பின்பற்றுவதும், பின்பற்றாதததும், அவரது உரிமை….
அவர் செய்யும் காரியங்களுக்கு,கிறிஸ்தவ மதத்தினை பொறுப்பாக்குகிறது, தங்கள் கேள்வி…….அவர்செய்த ஒரு காரியத்தால்,கிறிஸ்தவ மதம் தோற்றுவிட்டதாக,நீங்கள் சொன்னால்,உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மிஷினரிகளில்,60% அமேரிக்கர்களுடையது,அதை கொண்டு,அவர்கள் மக்களுக்கு அள்ளிகொடுக்கிறார்கள்,(நோக்கம் எதுவாகட்டும்) அப்போ கிறிஸ்தவம் ஜெய்த்து விட்டதா?
தனி ஒருவனின் செயல்பாடு,முழுமதத்தின்,பிரதிபலிப்பும் அல்ல,அவனது செயல்களுக்கு,மதத்தையும் பொருப்பாக்க முடியாது…..
இல்லை.மதம் தான் பொருப்பு என்று,நீங்கள் சொன்னால்,காந்தியை கொன்ற கோட்சே மூலமோ,அல்லது,குண்டு வைத்த துறவி பிரக்யா சிங்,மூலமோ ஹிந்து மதம் தோற்று விட்டது,என்று,நான் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?
நக்சல்லைட்டுகள் தாக்குதல்கள்: 2600 பேர் பலி
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18343
இந்த நியூச படிங்க……
இந்த இயக்கத்த சார்ந்தவங்க எல்லாம்,ஹிந்துக்கள்,எனவே, அவர்களுக்கு, ஹிந்து மதம் தான் பொறுப்பேற்க்குமா? அல்லது சகஹிந்து எனும் ரீதியில், தாங்கள் தான் பொறுப்பேற்று கொள்வீர்களா?….இல்லை அவர்களை நீங்கள் என்னசெய்ய போகிறீர்கள் என்று,நான் தங்களை நோக்கி கேட்டால்,தங்கள் பதில் என்னவாக இருக்கும்,சகோதரரே?
இதே நிலை இஸ்லாத்துக்கும்,இஸ்லாமியர்களான எங்களுக்கும், பொருந்தும்,
ஏதோ முஸ்லிம்கள் எல்லாம்,அரபு நாட்டில் இருந்து வந்தவர்கள் என்ற தங்களது பார்வை,தவறானது…இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் இந்தியர்களே,அவர்கள் சார்ந்துள்ள மார்க்கம் இஸ்லாம்,தாங்கள் ஹிந்து மதத்தை சார்ந்துள்ளது போல,அவ்வளவே….
மற்றபடி,தேசப்பற்று,ஒருமைப்பாடு,நாட்டுநலன்,இவற்றில் யாரும் யாருக்கும்,குறைந்தவர்கள் அல்ல….
சகோதரரே,இத்தனை விஷயங்களும்,நான் இங்கு,பதிந்ததற்கான காரணம்,இஸ்லாமிய பெயர்தாங்கிகளால்,செய்யப்படும்,வன்முறையை ஒரு போதும் நியாயப்படுத்த அல்ல…..
குற்றம் யார் செய்தாலும்,தயவு தாட்சண்யம் இன்றி தண்டிக்கப் பட வேண்டும்.
இது தான் எனது நிலைப்பாடு,நான் சார்ந்துள்ள மார்க்கமும் ,அதையே சொல்கிறது….
யாருக்காகவும் நானோ,நான் சார்ந்துள்ள மதமும் பொருப்பேற்க முடியாது…இது ஹிந்துக்களுக்கும் பொருந்தும்…
நாம்,நமது நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும் அவ்வளவே…..
நன்றி..
அன்புடன்
ரஜின்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்