செவ்வாய், அக்டோபர் 06, 2009

தோழர் செங்கொடியின் பதிவிற்க்கு எனது பதில்.....

அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்.

அவர் பதிவின் ஒரு பகுதி....

//அல்லாவிடத்தினில் ஒரு ஏடு இருக்கிறது, அதில் குறிப்பிடப்படாத விசயமே இல்லை. நடந்த, நடக்கின்ற, இனி நடக்கவிருக்கும் அத்தனையும் அதில் இடம்பெற்றிருக்கும். அந்த ஏட்டில் இருக்கும்படியே உலகமும், பிரபஞ்சமும் இயங்கிவருகிறது. முதல் மனிதனிலிருந்து இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் மனிதகுலம் வாழ்ந்தாலும் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் அந்த ஏட்டில் இருப்பதன் படியே நடந்து கொள்கின்றனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் விளக்கமாக சொல்வதென்றால், எடுத்துக்காட்டாக இருவர் சந்தித்துக்கொள்வதாக கொள்வோம். அவர்கள் இருவரும் புன்னகையுடன் கைகுலுக்கிக்கொள்ளலாம் அல்லது கோபத்தில் ஒருவரை ஒருவர் அறைந்து கொள்ளலாம். இந்த இரண்டு செயல்களில் எது நடந்தாலும் அது அல்லாவிடம் இருக்கும் அந்த ஏட்டில் உள்ளபடிதான் நடக்கும். அல்லா அறைந்து கொள்வார்கள் என எழுதிவைத்திருந்தால் ஒருக்காலும் அவர்களால் கைகுலுக்கிக்கொள்ளமுடியாது. இப்படி இருக்கும் நிலையில் எதை மனிதன் சிந்தித்து செய்வது? அதாவது ஒரு மனிதன் சிந்தித்து செயல் படுகிறான் என்றால் அந்த ஏட்டில் இருக்கும்படியே செயல் படுகிறான் என்பதை மறுக்கவேண்டும், அல்லது ஏட்டில் இருக்கும் படியே எல்லாம் நடக்கிறது என்றால் மனிதன் சிந்தித்து செயல்படுகிறான் என்பதை மறுக்கவேண்டும். ஏனென்றால் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரிடையானவை. சிந்தனை என்பது அந்தக்கணத்தில் நிகழ்வது அது ஏற்கனவே எழுதி வைத்ததோடு இணங்கிச்செல்வது என்பது எப்போதும் நடைபெற முடியாது.//

எனது பதில்........

செங்கொடி….ம்ம் ..நல்லா தான் லாஜிக் பேசுரீங்க….

அப்படி நீங்க சொல்ரத பாத்தா,ஒரு விஞ்ஞானி,(artificial intelligence)உள்ள ஒரு ரோபாட்டை உருவாக்குகிறார் என்று வைத்துக்கொள்வோம்….அதை நீங்கள் விலை கொடுத்து வாங்குகிறீர்கள்…அதனுடன் ஒரு புத்தகம் இணைக்கப் பட்டு இருக்கும்… இது இது எல்லாம்,இந்த ரோபாட்டை சிறப்பாக செயல்பட செய்யும்….இவ்வாறு பயன்படுத்தினால்,இது செயல் இழந்துவிடும்… இந்த ரோபாட் இந்த நேரத்தில் இப்படி செய்யும்,இந்த சூழ்நிலையில் இப்படி செயல்படும் என அது குறித்த அனைத்தும் அதில் குற்ப்பிட்டு இருப்பார் அந்த விஞ்ஞானி,அல்லவா?…. ஆனால் ரோபாட்டுக்கு,சுய சிந்தனை திறன் உண்டு,…

சரி இப்போ ஒங்க லாஜிக் படி,நீங்க அந்த விஞ்ஞானி கிட்ட கேக்குரீங்க……

இந்த ரோபாட் சுயமா சிந்திக்குதா? அல்லது உங்க புத்தகத்துல உள்ளது மாதிரி செயல் படுதான்னு?…..

அதற்கு அந்த விஞ்ஞானி சொல்லுவாறு,அடப் பைத்தியக்காரா,…அது சுயமாதான் சிந்திக்குது,

அதோட அந்த சிந்தனையை புரோக்கிராம் செய்த எனக்கு தெரியாதா? அது என்ன செய்யும்னு….அதுக்கு அந்த திறன கொடுத்ததே நான் தானேடா?…..

அத தயாரிச்ச எனக்கு தானடா அத பத்தி முழுமையா தெரியும்….

[ஒரு ரோபாட்டின்(மனிதன்) சிந்தனை எக்காலத்திலும் அதை உருவாக்கிய விஞ்ஞானியின்(அல்லாஹ்) அறிவை எட்டி பிடிக்க முடியாது....]

சாதாரண விஞ்ஞானி,உங்கள பாத்து இப்படி கேட்டா?…என்ன சொல்வீங்க…. ஆமாங்க…நீங்க சொல்ரது சரிதான்னு தானே…

அப்ப்டி இருக்கும் போது….எல்லாம் வல்ல இறைவன் சொல்கிறான்…நான் தான் உன்னை படச்சேன்…நான் தான் ஒனக்கு அறிவ கொடுத்தேன்னு…..அப்படி இருக்கும் பொது அந்த அறிவக்கொண்டு…நீ என்னல்லாம் சிந்திப்பன்னு எனக்கு முன் கூட்டியே தெரியாதா?….அவன் கேட்டா? அதுக்கு நீங்க என்ன சொல்வீங்க…….

இறைவன் கொடுத்த அறிவு இருக்குல…..சிந்தித்து பாருங்க….. அல்லாஹ்வும் அததான் செய்ய சொல்ரான்…..

சிந்திக்கவும்…….

அன்புடன் ரஜின் http://sunmarkam.blogspot.com/

1 கருத்து :

  1. பெயரில்லா8/10/09 11:34 PM

    நண்பர் ரஜின்,

    முதலில் உங்களுக்கு நன்றி. இது விதிக்கோட்பாடு அதை விவாதிக்க தடை இருக்கிறது என்று ஹதீஸை இழுத்து நிருத்தியவர்களின் மத்தியில் நீங்கள் பதில் சொல்ல முனைந்ததற்காக.

    உங்கள் எடுத்துக்காட்டையே எடுத்துக்கொள்வோம். நான் ஒரு இயந்திரனை (ரோபாட்) வாங்குகிறேன், அதனை உருவாக்கிய அறிவியலாளரின் கையேட்டோடு. அந்த அறிவியலாலர் என்னிடம் இப்படி விளக்குவார். இது சுய சிந்தனை கொண்டது, இதன் சிந்தனை, நினைவாற்றல் பகுதி இருமடி (பைனரி)முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. (மின்னணுவியல் பொருட்கள் இருமடி அடிப்படியிலேயே இயங்குகின்றன. அவ்வளவு ஏன் நம்முடைய மூளையும் இருமடி அடிப்படையிலேயே இயங்குகிறது) இதில் இந்த முறையில் உள்ளீடு செய்தால் இப்படியெல்லாம் இயங்கும். இதன் நிரல்கள் (ப்ரோக்ராம்) சூழலை கவனித்து அதற்க்கு தகுந்தது போல் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் உணரிகள் (சென்சர்) தட்பவெப்பம் முதல் அனைத்தையும் உள்வாங்கும் திறன் கொண்டவை. இதை இன்னின்ன வழிகளில் நீங்கள் செயல்பட வைக்கலாம், இன்னின்ன வழிகளில் கட்டுப்படுத்தலாம். என்றவாறெல்லாம் நான் கேட்பதை பொருத்து விளக்குவார். இப்போது நான் அதை வீட்டுக்கு எடுத்துவந்துவிட்டேன். வீட்டில் இயந்திரன் அமர்வதற்கு தோதாக நாற்காலி இருக்கிறது. தரையில் அமர்வதற்கு தோதாக விரிப்பு இருக்கிறது. ஓய்வெடுப்பதற்கு தோதாக சாய்வு நாற்காலி இருக்கிறது. அல்லது இவைகளை ஒதுக்கிவிட்டு தரையில் அமரவும் தரை சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இப்போது சுய சிந்தனை வாய்க்கப்பட்ட இயந்திரன் அது வேலை செய்த களைப்பு, அந்த அறையின் வெப்பம், அதன் தேவை இவைகளை கணக்கிலெடுத்து இருக்கும் நான்கில் ஒன்றை தேர்ந்தெடுத்து அமரும். இப்போது அந்த அறிவியலாளரைக் கேட்டால் எதில் அமரவேண்டும் என்பதை அதுதான் முடிவு செய்யும் ஆனால் அது நான் அமைத்திருக்கும் நிரல்களின் அடிப்படையில் இருக்கும், என்றுதான் கூறமுடியுமே தவிர இந்தப்பொழுதில் இப்படி அமரும், இந்தக்கணத்தில் இங்கு நகரும் என்றெல்லாம் சொல்ல முடியாது. காரணம் அதற்கு இருப்பது சுய சிந்தனை.

    இப்போது நோக்கத்திற்கு வருவோம். இங்கு பின்னூட்டமிட்ட எல்லோரும் விதிக்கோட்பாடு என்கின்றனர். இல்லை கேள்வி விதி தொடர்பானதில்லை. விதி என்பது நடந்த நடக்கவிருக்கும் செயல்களை அடிப்படியாகக்கொண்டது. நான் கேட்பது செயல்களை இயக்கும் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது, அதை விளக்குவதற்கு செயலை பயன்படுத்தியிருக்கிறேன். மனிதன் எந்தக்கணத்தில் என்ன செய்வான் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு பதிவுசெய்து வைக்கப்பட்டிருக்கிறது என்றால் சிந்தனை என்பதன் பொருளென்ன? சிந்தனை என்றால் அந்தக்கணத்தின் சூழலுக்கு உட்பட்டு நீங்கள் தேர்ந்தெடுக்கும் முடிவு. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டது என்றால் சூழல் எப்படி இருந்தாலும் குறிப்பிட்டபடியே நீங்கள் நடந்து கொள்வதை குறிக்கும். இரண்டும் வேறுவேறு நிலை. ஏதாவது ஒன்றுதான் சரியானதாக இருக்க முடியும். அந்த சரியானது எது என்பதே உங்கள் முன் வைக்கப்பட்டிருக்கும் கேள்வி.

    பதில் கூறுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

    தோழமையுடன்
    செங்கொடி

    பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்