ராதிகாவோ...விவாதித்த
அனைத்தையும் ஒரு கணம் யோசித்தவளாய்... இருக்குப்பா ஆனா இல்ல என்றாள்...(பாகம் 03)
இதென்ன...சினிமா
டயலாக்லாம் விட்டுட்டு இருக்க... சொல்லு.. இருக்கா? இல்லையா? என விளையாட்டாய்
கடிந்துகொண்டாள்...
ப்ச்...ஹதி...நான்
சொல்லவந்தது..இன்னும் அப்படியான சில உடைகள் இருக்கு,ஆனா அவை தற்கால உபயோகத்திற்கு
தக்கவாறு பொலிவு பெறாததால,அவை ஓல்ட் ஃபேஷன் கேட்டகிரிக்கு போயிடுச்சு...அதத்தா
புத்திசாலித்தனமா சொன்னேன்..உனக்கு புரியல...என ராதிகா கிண்டலாய் சீண்டினாள்..
ஹதிஜா..சிரிப்பை
பாவனையில் காட்டிவிட்டு,அங்கலாய்ப்புடன்...ஹ்ம்ம், ஆமாப்பா நீ சொல்றது
சரிதான்....சில சுடிதார் வகைகள்,அப்ரம் பாட்டியாலா போன்ற ட்ரெஸ்லாம் ஓரளவு இந்த
வரைமுறைக்குள்ள வரும்...ஆனால் அதுகள்ளையும் ஃபேஷன் புகுந்து இப்போ முறையான
சுடிதார்கள் கூட கெடக்கிறதில்ல...அப்டி ஒரு முழுமையான ட்ரெஸ்ஸ் இல்லாததாலதான இது
என தன் பர்தாவை காட்டினாள்...
இதைக்கேட்கும்போதே
ராதிகாவுக்கு ஓரளவு புரிந்தது...பர்தா எனும் மேலாடை, இந்த பற்றாக்குறையை
பூர்த்திசெய்ய வந்ததுதான் என்று... ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்ல மனம் வராமல்....ம்ம்..என நிறுத்திக்கொண்டாள்...
(ஹதிஜா
தொடர்ந்து....) சரி அதெல்லா கெடக்கட்டும்..இப்போ சொல்லு. பர்தா பத்தி என்ன
நெனக்கிற.. என்றாள்...
இதுக்குள்ள
இவ்ளோ விசயம் இருந்தாலும்,உடல் மறைக்கனும்கிற எண்ணம், உங்களுக்கு உங்க மதம்தா
கொடுத்தது இல்லயா? அது இல்லைன்னா உங்களுக்கு அந்த எண்ணமும் இல்ல,பர்தாவும்
இல்ல.... அப்டியா? என்றாள்...
அஃப்கோர்ஸ்
டியர்...அப்டீன்னு உற்சாகமாக ஹதிஜா பதிலளிக்க.. ராதிகாவோ.. விழி விரிந்தவளாக.. ஏண்டி அப்போ உங்களுக்கு சுயபுத்தியே கெடையாதா?..
ஒளர்ர என்றாள், காட்டமாக..
ஹதிஜா
சலனமில்லாமல், சிறு உதாரணத்துடன் பதிலளித்தாள்...கூல் டியர்...எல்லார்க்கும்
சுயபுத்தி இருக்கு...ஏன்? உனக்கு இருக்கே... எது சரி எது தப்புன்னு உனக்கும் தெரியுமே...
இருந்தாலும் ஏன் உங்கம்மா அப்பா சொல்றத கேட்டு நடக்குற?. அவங்க சொன்னாத்தா உனக்கு
தெரியுமா??..உனக்கு சுயபுத்தி இருந்தாலும்,அவங்க சொல்ரத தட்டாம ஏன் நடக்குற... என
கேள்வி வைத்தாள்..
ராதிகாவோ...ஏன்னா
அவங்க என்னய பெத்தவங்க...அவங்களுக்கு தெரியும் எனக்கு எது நல்லது எது
கெட்டதுன்னு...எம்மேல அவங்களுக்கு அக்கர இருக்கு..பாசம் இருக்கு,அவங்க சொல்றது
நல்லதாத்தா இருக்கும்...அதனால கேக்றேன் என்றாள்...
நம்மல
பெத்தவங்களுக்கே நம்ம மேல இவ்ளோ அக்கரையும் பரிவும், பாசமும், கவனமும் இருக்கே, அப்போ,
நம்மையும் நம்மள பெத்தவங்களையும் படைச்ச இறைவன் எலலார் மேலையும், கண்டிப்பா அவங்கள
விட பாசம் அக்கரை கொண்டுள்ளவனாகத்தான இருக்கமுடியும்??
ம்ம்
ம்ம்..சரிதான் சொல்லு,,என்றாள் ராதிகா,,..
இஸ்லாத்துல
சொல்லி இருக்கிற விஷயங்கள் எல்லாம், என்னையும் உன்னையும் படைத்த இறைவன் நமக்கு
கொடுத்த செய்திகள்தான்...இதில் பர்தா குறித்த செய்தியும் ஒன்று...ஒருவேலை அல்லாஹ்
இவற்றை எல்லாம் சொல்லாமல் இருந்திருந்தால்,இவ்வுலக பகட்டான வாழ்க்கைக்கு நானும்
பலியாகி, மாடர்ன் மங்கையாகியிருப்பேன்..சொன்னது மட்டும்தான் வேறெதும்
இல்லைன்னாலும்.. நான் கொஞ்ச காலத்தில் அதை மதிக்காமல் “ப்ச் என்ன ஆகிடப்போகுது..
பாத்துக்கலாம்னு” மாறியிருப்பேன்...ஆனா நமக்கு வழிகாட்டிய இறைவன்..நம்மோடு இருந்து நம்மை
வழிநடத்தவும், கண்காணிக்கவும் செய்யிரதோட இல்லாம,அதக்கொண்டு நமக்கு நாளை தீர்ப்பு
வழங்குபவனாகவும் இருக்கைல.... எப்படி எந்த ஒரு தவறையும் செய்யமுடியும்..??
நம்ம
பெத்தவங்க சொல்ரத கேட்டா நமக்கு நல்லது நடக்கும்ன்னா..எல்லாம் வல்ல அல்லாஹ்வின்
கட்டளைக்கு அடிபணிந்து நடந்தா?...நான் என்னோட உலக வாழ்க்கைலையும் சிறப்போட
வாழுறேன்.. அத்தோட என்னைபடைத்த இறைவனுக்கும் நான் பிரியமானவளா போயிடுறேனே.. இது
எனக்கு கொடுப்பன இல்லயா.. அப்டி இல்லாம என் இஷ்ட்டத்துக்கு நடந்தா..அதன் பாரதூரமான
விளைவுகள உலகத்துலயும் அனுபவிக்கனும், அல்லாஹ்வுக்கும் பாவியாத்தா போகனும்... இப்டி
இருக்க எனக்கேன வந்துச்சு ராதி??? என்றாள்..
ஓ....பரவாயில்லப்பா..
இதுல இவ்ளோ விஷயம் இருக்கா... நான் கூட மேலோட்டமா கருப்புத்துணியப்
பாத்துட்டு..அடிமைத்தனம்ன்னு முடிவு கட்டிட்டேன்.. ஆனா இது அதையும் தாண்டி இறைபக்தி
நிலைக்கும் கொண்டு போர விஷயமாவுல இருக்கு என ஆச்சரியப்பட்டாள்..
ஆமா
ராதிகா...இஸ்லாம் மற்ற மதங்களப்போல இல்ல,ஆன்மீகம் தனியா லௌகீகம் தனியான்னு...
இஸ்லாமிய மார்க்கமே, உலக மற்றும் ஆன்மீக வாழ்க்கைய தனித்தனியா பிரிக்கமுடியாத
அளவுக்கு கலந்த ஒன்றாத்தான் நமக்கு கொடுக்கப்பற்றுக்கு....
ஆனா
இத பலபேர் விமர்சிப்பாங்க..ஹ்ம்..ஒரு வேல சாப்பாடு கூட இஸ்லாம் சொன்ன மாதிரித்தா
திம்பானுக இவனுகன்னு...அப்டீன்னு...ஏன் நம்ம
இஷ்ட்டத்துக்கும் சாப்பிடலாமே.. ஆனா அந்த சின்ன வேலையக் கூட இஸ்லாம் சொன்ன வழில
செய்யும்போது அதுக்கும் நமக்கு இறைவன் புறத்துல இருந்து நன்மை கிடைக்கிதே.. அத்தோட
பெருமதிப்புக்குரிய இறைப்பொருத்தமும் கிடைக்கிதே... இப்படியான சின்ன சின்ன
காரியத்துகெல்லாம் பெரியபெரிய மதிப்பு இருக்கும் போது, பர்தா போன்றவைகளெல்லாம்
முக்கியமான கட்டளைகளாக அல்லாஹ் வரையறுக்கிறான். அதை கவனச்சிரத்தையுடன்
பேணும்போது,என் இறைவனுக்காக அணிகிறேன், அவன் சொன்ன வழியில் நடக்கிறேன் என்ற ஆன்மீக
திருப்தியும்,அதை அணிந்து போகும்போது, பிறர்க்கு காட்சிப் பொருளாக
இல்லாமல், கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் நான் இருக்க... எனது உலக வாழ்விலும் எனக்கு
சிறப்பு கிடக்கிதே..ஆக, இது கரும்பு தின்னக்கூலி கொடுத்த மாதிரித்தானே??... என
சிரித்தாள்...
என்னது
சாப்டுரது மாதிரி சின்ன விசயத்துக்கெல்லா நன்மையா? என்னப்பா சொல்ர..எதாவது நல்லது
செய்தாத்தானே பொதுவா கடவுள் நன்மை எழுதுவாறு.... இப்டில்லாமா இருக்கு? என்றாள்
வியப்பாக..
ஹதிஜாவோ..ஆமா
அது நியாயம் தானே? உதாரணமா திருடி சம்பாதிச்சா, கடவுள் பாவம் வழங்குவார் இல்லயா?..ஆமா..என்றால் ராதிகா. அப்டீன்னா நல்ல வழியில
சம்பாதிக்கிரவங்களுக்கு நன்மை கொடுக்குறதுதானே லாஜிக்...என்றாள் ஹதிஜா...
இண்ட்ரஸ்ட்டிங்.....
நான் கூட தருமம், உதவி செய்யிரது,தொழுகுறது,.வெரதம் இருக்கிறது இதுல மட்டும்தா
நன்மைன்னு நெனச்சுட்டு இருக்கேன்..ஆனா இதையேல்லா கவனத்துல எடுத்து கடவுள் நன்மை
கொடுத்தா,அப்ரம் லைஃப்ல எல்லாத்தையுமே சர்வ சாதாரணமா செய்துட்டு..கூடவே நன்மையும்
வாங்கிட்டு போயிடலாம் போலயே..என ஆச்சிரியப்பட்டாள் ராதிகா...
ம்ம்
ரொம்ப கரெக்ட் ராதி.. அதேமாதிரி.. பெண்களுக்கு இறைவன் கொடுத்த ஆடை வரைமுறை கண்ணியத்தையும், பாதுகாப்பையும் வழங்குவதில்
மூத்தநிலையில் இருக்கிறெதே.. அதைவிட ஆடையில் சிறந்த ஒன்றை நம்மால் வரையறுக்க
முடியுமா?..என்றாள்...
ராதிகா..இதுகுறித்த
ஏதோ மனமாற்றத்தை உணர்ந்தவளாக,பர்தா குறித்து சற்றே மனவிசாலத்துடன்
பேசத்துவங்கினாள்...
ஹதிஜா...எனக்கு
இதல்லா கேக்கும்போது, உண்மைலேயே ஆச்சிரியமா இருக்குப்பா... ஒவ்வொரு செயலுக்கு
பின்னாடியும்,ஒரு மிகப்பெரிய பொருள் இருக்கு.அதுல ஆன்மீகமும் கலந்திருக்கு,
நம்மளுடைய அன்றாட வாழ்க்கையும் சரியா போகுது...கடவுளுக்கும் நம்மள
பிடிச்சுப்போகுது... எல்லாத்தையும் இஸ்லாம் ஒன்னாக்கி வச்சுருக்கேப்பா... இத
இப்போத்தா புதுசா கேள்விப்படுறேன்.
பர்தாவ, அதன்
தாத்பரியங்களோட புதுஸா பாக்றேன்..இப்போ எனக்கு அதன் மீது இருந்த பார்வை
மாறியிருக்கு ஹதிஜா... பர்தா போடுரது அடிமைத்தனம்னு சொல்றதுல எந்த அர்த்தமும்
இல்ல... அதை ஒரு கலாச்சாரம்ன்னு கூட வகைப்படுத்த முடியாது, அத..அத, பெண்களுக்கான
கண்ணியமான ஆடை வரைமுறைன்னு மட்டும் சொல்லிட முடியல,அதுல ஆன்மீகம் கலந்து இருக்கு.
அதுனால கடவுளோட அனுகிரகம் எப்போவும் நமக்கு கெடச்சுட்டே இருக்கும்...
இஸ்லாமிய
மதத்துல இத்தனை பெரிய பொருண்மை அடங்கியிருக்கும்ன்னு நான் நெனச்சுக்கூட
பாக்கலப்பா..எலலாரும் ரொம்ப பெரிய விஷயமா கருதும்,விமர்சிக்கும் பர்தா,தனக்குள்
இத்தனை விஷயங்களை கொண்டு இருக்க, இஸ்லாத்தின் பிறகொள்கைகள் எவ்வளவு சிறப்பா
இருக்கும்ன்னு அனுமானிக்க முடியுது.ஆனால் அதனுடைய வெளித்தோற்றம் நான் உட்பட
பாக்கிறவங்களுக்கு பலாபழமாக தெரிவதால், உள்ள இருக்கும் நலவை அறியாமலே விலகிப்போயிடுறோம்...என்றாள்
ராதிகா..
இருவரும்
ஏதோ ஒரு திருப்தியுடன், சிரித்துவிட்டு...தத்தமது செல்போன்களை பார்க்க,தலா
பத்துக்கும் மேற்பட்ட மிஸ்கால்கள் வந்து கிடந்தன...நேரமாகி இருட்டுவதை
அவதானித்தவர்களாக, இருவரும் சைக்கிளை வெளியே எடுத்து வீட்டிற்கு விரைந்தனர்...
வெகுநேரம் இருவரையும்
மௌனம் கவ்விக்கொண்டது..
ஹதிஜா
– தன் நிலையை ராதிகாவுக்கு புரியவைத்த சந்தோஷத்தில் மனதுக்குள் குதூகலித்தவளாக
பெரும் மகிழ்ச்சியுடன் சைக்கிளை அழுத்திக்கொண்டிருந்தாள்... ராதிகாவோ பேசிய
விசயங்களை மனதுக்குள் அசைபோட்டவளாக உடன் வந்து கொண்டிருந்தாள்...
சிறிது
நேரத்தில் ராதிகா..அந்த மூனாவது பாயிண்ட் என்ன? என்றாள்... ஹதிஜா புரியாதவளாக எந்த
பாயிண்ட்??? எனக் கேட்க... ராதிகாவோ, அதாம்ப்பா உடம்ப மறைக்க இஸ்லாம் கொடுத்துள்ள
வரையரைல மூனாவது பாயிண்ட் என்றாள்...
ஹதிஜாவோ..எதுக்கு
மூனு..மொத்தமும் சொல்றேன்னு சொல்லிட்டு.. வரிசைப்படுத்தினாள்...
முகம், கை தவிர முழு உடலும் மறைந்து இருக்கனும்,
கண்ணாடி போன்ற மெல்லிய ஆடையாக அது இருக்கக்கூடாது.
அப்ரம் உடலோடு ஒட்டி,உடல் அங்கங்களை காட்டும் ஆடையாக
இருக்கக்கூடாது..
எதிர்பாலினத்தை தன்வசம்
கவரும் வகையான ஆடையாக இருக்கக்கூடாது...
இவ்ளோதாம்பா பர்தா...என்றாள்...
ஹதிஜா
சொல்லச்சொல்ல அதை மௌனமொழியில் பின் தொடர்ந்தவளாக ராதிகாவும் மனதுக்குள்
சொல்லிக்கொண்டாள்... ஹதிஜாவின் வீட்டை இருவரும் நெருங்கவே,அங்கு இருவரின்
அம்மாவும் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்...
மகள்
வருவதைக் கண்ட ஹதிஜாவின் அம்மா, எங்கடியா போனிய... ரெண்டுபேருமா... ஒடனத்தவளுகள்ளா ஊடுபோயிச் சேந்துட்டாளுவ. நீங்கெ சாவகாசமா ஊர்ரோலம் வர்ரிய...ஹதிஜா மஹரிக்கி (6
மணித்தொழுகை) முன்னாடி ஊட்டுக்கு வந்துரனும்மு சொல்லிருக்கேன்லடி.. என
கடிந்தார்.. ராதிகாவின் அம்மாவும்,ஏண்டி வர நேரமாகும்ன்னா போன்பண்ணி சொல்ல
வேண்டிதான.. எத்தன போன் பண்றது,என தன்பங்குக்கு முகம்காட்டினார்...
சரிக்கா
நா கெளம்புறேன்...இவ இங்கெதா இருப்பான்னு வந்தே...வந்ததோட பேச்சு
புடிச்சுகிறுச்சு... தா...இவளும் வந்துட்டா..அவரும் இன்னேரத்துக்கு வந்துருப்பாரு..வாடி
போவோம்ன்னு தன் மகளை அழைத்தவண்ணம் விடைபெற்றார் ராதிகாவின்
தாயார்...ராதிகாவும்,வரேம்மா,வரே ஹதி என விடைபெற்றுக்கொண்டு கிளம்பினாள்...
போகும்
வழியில்..யெம்மா...நா ஒன்னு கேக்றேன்,சொல்லேன் என்றால் ராதிகா... என்னடி என ரோட்டை பார்த்தவண்ணம்
அம்மா பதிலளிக்க,... முஸ்லிம்கள்ல்லா ஏ பர்தா
போடுராகன்னு தெரியுமாம்மா? என்றாள்...அவக மதத்துல
சொல்லிருக்கு செய்ராக....என்றார் எதார்த்தமாக...
ராதிகாவோ...அதில்லம்மா..என, தான் ஹதிஜாவிடம் கேட்டவைகளை தன் அம்மாவிடம் சொல்ல ஆரம்பித்தாள்...
முற்றும்...
அன்புடன்
ரஜின்
பர்தா என்ன சாதித்துவிட்டது??? - மின்னூல் - Download
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
பதிலளிநீக்குமாஷா அல்லாஹ் அருமையான , தெளிவான தொடர் பதிவு :-)
மாசா அல்லாஹ்! நெகிழ வைக்கும் பதிவு.
பதிலளிநீக்கு//ஆனா அந்த சின்ன வேலையக் கூட இஸ்லாம் சொன்ன வழில செய்யும்போது அதுக்கும் நமக்கு இறைவன் புறத்துல இருந்து நன்மை கிடைக்கிதே..//
பதிலளிநீக்குசரியா சொன்னீங்க பாய். இதுதான் இஸ்லாத்தில் உண்மையான சந்தோஷம். ஒரு கவளம் சோறு நாம் உண்டாலும் நம் பிள்ளைகளுக்கு ஊட்டினாலும் கிடைக்கும் நற்கூலி, கரும்பு தின்ன இரட்டைக்கூலி போல மாஷா அல்லாஹ்.....
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
பதிலளிநீக்குரொம்ப ஆவலா எதிர்பார்த்திட்டு இருந்த பதிவு ..
இலகுவான முறையில் தெளிவான விளக்கம்.
"பர்தா எனும் மேலாடை, இந்த பற்றாக்குறையை பூர்த்திசெய்ய வந்ததுதான்" அற்புதம்
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
உங்கள் சகோதரி
பஸ்மின் கபீர்
வ அலைக்கும் ஸலாம் சகோ ஜெய்லானி..
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி...
-------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ நசீர்.
-------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ அன்னு,
-------------------------
வ அலைக்கும் ஸலாம் சகோ ஃபஸ்மின்
தங்கள் அனைவரின் வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி சகோ...
அன்புடன்
ரஜின்
இந்துக்களின் மனது புண்படும்வண்ணம் நித்தியானந்தா சுவாமிகளைக் கிண்டல் செய்யும் சுவனப்பிரியன் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
பதிலளிநீக்குமாஷா அல்லாஹ்..பர்தாவின் மேன்மை பற்றி எளிதாக அனைவரும் புரியும் வண்ணம் கொடுத்த விதம் அருமை..
நல்லதொரு பதிவுக்கு நன்றி சகோ..:-))
அஸ்ஸலாமு அலைக்கும்
பதிலளிநீக்குசகோ மிக அருமையான பதிவு.யார் மனதையும் புண்படுத்தாமல் மென்மையான கேள்வி பதில்கள்
Radhi:ஏண்டி அப்போ உங்களுக்கு சுயபுத்தியே கெடையாதா?.. ஒளர்ர என்றாள், காட்டமாக..
ஹதிஜா சலனமில்லாமல், சிறு உதாரணத்துடன் பதிலளித்தாள்...கூல் டியர்...எல்லார்க்கும் சுயபுத்தி இருக்கு...ஏன்? உனக்கு இருக்கே... எது சரி எது தப்புன்னு உனக்கும் தெரியுமே... இருந்தாலும் ஏன் உங்கம்மா அப்பா சொல்றத கேட்டு நடக்குற?. அவங்க சொன்னாத்தா உனக்கு தெரியுமா??..உனக்கு சுயபுத்தி இருந்தாலும்,அவங்க சொல்ரத தட்டாம ஏன் நடக்குற... என கேள்வி வைத்தாள்
kalam
அருமையான பதிவு ...
பதிலளிநீக்குஉங்கள் பதிவு மேலும் பலரை சென்றடைய DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ்.DailyLib
we can get more traffic, exposure and hits for you
To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button
உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்
நன்றி
தமிழ்.DailyLib