சென்னை நகரை நோக்கி பல முறை பயணித்த
பிரயாணங்களில் ஒன்றில்:
விமானம் புறப்பட சுமார் ஒரு மணி
நேரத்திற்கு முன் விமான நிலையத்திற்கு புறப்பட எண்ணினேன் ஆனால் வழியின் நெரிசல்
மற்றும் சோதனைச்சாவடிகள் என்னை உரிய நேரத்தில் சென்றடைவதை விட்டு சற்று
தாமதப்படுத்திவிட்டன எனவே நான் அவசரத்திற்கு கைதியாகிவிட்டேன்.
கார் நிறுத்துமிடத்தின் வாயிலை அடைந்து
அதற்கான அனுமதிச் சீட்டை எடுத்துக் கொண்டு காரை ஓரங்கட்டினேன், நான் கார் நிறுத்திய இடம் விமானநிலையப்
பணியாளர்களுக்குரியதா? அல்லது
பயணிகளுக்குரியதா? என்று கூட
எனக்கு தெரியாது.
எதுவாக இருக்கட்டும்!
எனது பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு
நான் காரைவிட்டு அவசரமாக இறங்கினேன் இதுபோன்ற இடங்களில் அவசரமாக செல்வது என்பது
ஆச்சர்யப்படுவதற்கல்ல ஏனெனில் இது எல்லோராலும் ரசிக்கின்ற காட்சி,
நான் புறப்பாடு கூடத்தில் நுழைந்த பின்
சோதனையறையை அவசரமாக வந்தடைந்து எனது பாக்கெட்டில் உள்ளதை இறக்கிவைத்து சோதனையறையைக் கடந்தேன், திடீரென ஒரு ஓசை ஒலித்தது, கொண்டுசெல்ல அனுமதிக்கப்படாத ஏதோ ஒன்று
என்னுடன் இருப்பதாக உணர்ந்தேன் சிறு குழப்பம் ஏற்பட்டது, அதே நேரத்தில் என்னுடன் எனது
கைக்கெடிகாரம் இருப்பதாக தெரிந்து கொண்டு அதையும் இறக்கி வைத்துவிட்டு சோதனையறையை
விட்டு அமைதியாக வெளியேறி, விமானநிலைய
அதிகாரியிடம் அவசரமாக வந்து சேர்ந்து அவரிடம் :
'நான் விமானம் எண் 546ல் சென்னை செல்லும் பயணி' என்றேன்,
